1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: சனி, 8 ஜனவரி 2022 (12:56 IST)

ஒல்லி குச்சியா மாறி மாடர்ன் போஸ் கொடுத்த ஹன்சிகா - பிடிக்கலன்னு புலம்பும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.
 
பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் விட்ட ஹன்சிகா மீண்டும் தனது இன்னிங்ஸை துவங்கி ஹிட் படங்களை கொடுத்தார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ரோமியோ ஜூலியடீ படம் சூப்பர் ஹிட் அடித்த பட வாய்ப்புகள் அடுத்தது குவிய துவங்கியது. 

இதனிடையே திடீரென தனது உடல் எடையை குறைத்து  சைஸ் ஜீரோ லுக்கிற்கு மாறி  தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் ஸ்லிம் பிட் அழகை structure ஆக காட்டி போஸ் கொடுத்துள்ளார். இருந்தும் அவரது புஷ் புஷ் அழகை ரசித்த ரசிகர்கள் இந்த மாற்றம் பிடிக்கவில்லை என புலம்பி வருகின்றனர்.