வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: திங்கள், 20 மார்ச் 2017 (05:16 IST)

அங்கே போராடிக் கொண்டு இருக்காங்க!! நீங்க என்ன செய்றீங்க!! ஜிவி பிரகாஷ் ஆவேசம்

சமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு, நெடுவாசல் ஆகிய போராட்டங்களுக்கு பாடல்கள் கம்போஸ் செய்தும், நேரிலும் சமூக வலைத்தளத்திலும் ஆதரவு கொடுத்தவர் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்.


 



இந்நிலையில் தற்போது அவர் டெல்லியில் கடந்த ஆறு நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்காக ஆதரவு கொடுத்தூள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

தமிழர்களுக்கு வணக்கம்..!டெல்லியில் ஜந்தர் மந்தரில் ஆறாவது நாளாக நமது விவசாயிகள் போராடிக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழர்களாகிய நாம் ஒன்றிணைந்து அவர்களுக்கான ஆதரவை அளித்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும். நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயம் தான். அதை விட்டுக் கொடுக்கக் கூடாது. நமது விவசாயிகள் அங்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே தயவு செய்து உங்கள் ஆதரவை காட்டுங்கள். இது மிகவும் முக்கியம்' என்று கூறியுள்ளார்