1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: புதன், 29 மார்ச் 2017 (18:17 IST)

ஜி.வி. பிரகாஷ் என்னை ரொம்பவே இம்ப்ரஸ் பண்ணிட்டார்: நடிகை மஹிமா நம்பியார்!

பிரகாஷ் குமாருடன் சேர்ந்து ஐங்கரன் படத்தில் நடித்து வருகிறார். ரவி அரசு இயக்கும் ஐங்கரன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் நடக்கிறது. இதில் முதல் முறையாக ஜி.வி. பிரகாஷ் ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்து  வருகிறார்.

 
முதல் நாளே ஜி.வி.யுடன் சேர்ந்து காதல் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தது. இதனால் முதல் முறையாக சேர்ந்து நடிப்பதை  நினைத்து பயமாக இருந்தது. அப்போது டைரக்டரிடம் சீன் கேட்டுவிட்டு என்னை நோக்கி வந்த ஜி.வி. பிரகாஷ் எனக்கு  கைகொடுத்துவிட்டு, இந்த காட்சியில் இந்த மாதிரி நடிப்போம் என்றார். சிறிது நேரத்தில் நீண்டகாலமாக பழகிய நண்பர்  போலவே பேசிப்பழகினார்.
 
ஜி.வி. பிரகாஷ் என்னிடம் நடந்து கொண்ட விதத்தால் எனக்கு பயம் போய் தைரியம் வந்தது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில்  அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன் என்கிறார் மஹிமா.