1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2016 (16:57 IST)

ஜி.வி.பிரகாஷ் பட டீசரில் அஜித், விஜய்

ஜி.வி.பிரகாஷ் பட டீசரில் அஜித், விஜய்

ஜி.வி.பிரகாஷ் எனக்கு இன்னொரு பேர் இருக்கு படத்தில் பிசியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.


 
 
இப்படத்தின் டீசரை வருகிற 28-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற தலைப்பு, பாட்ஷா படத்தில் ரஜினி பேசும் ஹிட்டான டயலாக்.

அந்த டயலாக்கையே படத்தின் தலைப்பாக வைத்ததால், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில், பாட்ஷா படத்தில் ரஜினி கம்பத்தில் கட்டப்பட்டு வில்லனிடம் அடிவாங்கும் காட்சியைப் போன்று மழையில் ஜி.வி.பிரகாஷ் காக்கி உடையில் கம்பத்தில் கட்டப்பட்டு இருப்பதுபோல் வடிவமைத்து வெளியிட்டனர்.
 
தற்போது டீசரிலும் ஏதாவது புதுமையை செய்ய நினைக்கும் படக்குழுவினர், அஜித், விஜய் குறித்த சில விஷயங்களை இந்த டீசரில் இணைத்து வெளியிடவுள்ளார்களாம்.
 
இந்த டீசரை வருகிற 28-ந் தேதி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடவுள்ளார்.