1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 27 அக்டோபர் 2017 (21:35 IST)

சின்ன இளையதளபதி: ஜி.வி. பிரகாஷ் ரியக்‌ஷன்...

ஜி.வி. பிரகாஷ் தனது அடுத்த படத்திலிருந்து சின்ன இளையதளபதி என பட்டம் போடவுள்ளதாக செய்திகள் வெளியானது. 


 
 
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் செம, நாச்சியார், அடங்காதே உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளன. இந்நிலையில், சின்ன இளையதளபதி என்ற தலைப்பை தனது பெயருக்கு முன்பு போட ஜி.வி.பிரகாஷ் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
 
இது குறித்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், தேவையற்ற செய்தி. யாரும் எந்த பெயரையும் எடுத்து கொள்ளப் போவதில்லை. தவறான தகவல்களை பரப்பாதீர்கள். 
 
விஜய் எனது சகோதரர். நான் அவரது ரசிகன், தம்பியை போன்றவன். இது போன்ற தவறான தகவல்களை பரப்புவதால் இவர்களுக்கு என்ன சந்தோஷம் கிடைக்கும் என தெரியவில்லை. இதுபோன்றவற்றை பார்க்கும்போது எரிச்சலாக வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.