1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2023 (18:43 IST)

ஜிவி பிரகாஷின் 25வது படம்.. டைட்டில் போஸ்டரை ரிலீஸ் செய்த கமல்ஹாசன்..!

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ’டார்லிங்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிலையில் தற்போது அவர் 25வது படம் என்ற மைல்கல்லை எட்டி உள்ளார். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன் சற்றுமுன் வெளியிட்டுள்ளார்.

ஜிவி பிரகாஷின் 25 திரைப்படத்திற்கு கிங்ஸ்டன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகியாக திவ்யபாரதி நடிக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி ஆகிய இருவரும் ஏற்கனவே பேச்சிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி இசையமைப்பதோடு இந்த படத்தை ஜிவி பிரகாஷ் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்க உள்ளார்.

இந்த படம் முழுக்க முழுக்க கப்பலில் நடப்பதாகவும் இதற்காக பிரமாண்டமான கப்பல் செட் ஒன்று போடப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டது

Edited by Mahendran