1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 24 ஜனவரி 2018 (22:16 IST)

பத்மாவத் படத்தை திரையிட மாட்டோம்; குஜராத் மல்டிபிளக்ஸ் சங்கம்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான பத்மாவத் திரைப்படம் பல எதிர்ப்புகளை கடந்து இன்று வெளியாகியுள்ள நிலையில், படத்தை நாங்கள் திரையிட மாட்டோம் என குஜராத் மல்டிபிளக்ஸ் சங்கம் அறிவித்துள்ளது.

 
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான திரைப்பரம் பத்மாவத். இதில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர். ராணி பத்மாவதி குறித்த இந்த வரலாற்று படத்துக்கு பாஜக தலைவர்கள் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என வட இந்தியாவில் பல போராட்டங்கள் நடந்தது. பத்மாவதி என்று பெயரில் உருவான திரைப்படம் பத்மாவத் என்ற பெயரில் இன்று வெளியானது. இந்நிலையில் குஜராத்தில் பத்மாவத் திரைப்படத்தை திரையிட மாட்டோம் என மல்டிபிளக்ஸ் சங்கம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
 
பாதுகாப்பு காரனம் கருதி திரையிடல் இல்லை என்றும் தாக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.