சீக்கியர் படுகொலை பற்றிய வெப்சீர்ஸ் கிரஹான்… கிளம்பியது எதிர்ப்பு!
சமீபத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியான கிரஹான் என்ற வெப் தொடருக்கு பலமான எதிர்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்தில் வெளியான பேமிலி மேன் சீரிஸ் இரண்டாம் ஈழ விடுதலைப் போராளிகளை இழிவாக சித்தரித்ததாக குற்றச்சாட்டு வைத்தது. அதனால் தமிழகம் மற்றும் ஈழ மக்களிடம் கடுமையான எதிர்ப்புகளை எழுப்பியது. இப்போது அதுபோல இந்திரா காந்தியின் படுகொலைக்கு பின்னர் சீக்கியர் படுகொலை பற்றிய மறுவிசாரணையாக உருவாகியுள்ளது கிரஹான் எனும் தொடர். இதில் சீக்கியர்களின் படுகொலையை நியாயப்படுத்தும் விதமானக் காட்சிகள் உள்ளதாக சீக்கியர்களிடம் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது. தொடரை திரும்ப பெறவேண்டும் என டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.