வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (11:29 IST)

சரிகமப புகழ் ரமணியம்மாளுக்கு சூப்பர் அதிர்ஷ்டம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ராக்ஸ்டார் ரமணியம்மாள். 60 வயதை கடந்த இவர், பல வீடுகளில் வீட்டு வேலைகள் செய்து தனது வாழ்க்கையை நடத்தி வந்தார்.
 
சரிகமப பாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பாடிய பாடல்கள் பலரை மனதை கவர்ந்தது. வெளிநாடுகள் எல்லாம் சென்று பாடல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். 
 
இந்நிலையில் அதே தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும்  யாரடி நீ மோகினி சீரியலில் ஒரு முக்கிய வேடத்தில் ரமணியம்மாள் நடிக்கிறாராம். பாட்டை தாண்டி தற்போது நடிக்க வந்த ரமணியம்மாளின் விடா முயற்சி பலருக்கு முன் உதாரணம்.