1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam
Last Updated : செவ்வாய், 9 மே 2017 (15:18 IST)

மறு தணிக்கைக்கு செல்லும் அட்லீ படம்?

அட்லீ தயாரித்துள்ள ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’ படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதால், படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பலாமா என்று யோசித்து வருகின்றனர்.

 
 
அட்லீயின் ‘ஏ பார் ஆப்பிள்’ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’. கமலிடம் உதவியாளராகப்  பணியாற்றியுள்ள ஐசக், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜீவா – ஸ்ரீதிவ்யா இருவரும் ஹீரோ – ஹீரோயினாக நடித்துள்ளனர். இந்தப் படத்தை, வருகிற 19ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவெடுத்திருந்தனர்.
 
இந்நிலையில், படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள், படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால், படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. யு சான்றிதழ் கிடைக்காததால், எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லையாம்.
 
இன்னொரு பக்கம், ‘பாகுபலி-2’ இன்னும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருப்பதும் ஒரு காரணம். எனவே, படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பலாமா என்று யோசித்து வருகிறார்கள். அல்லது குறைந்த தியேட்டர்களில் ரிலீஸ் செய்யலாமா என்றும் ஆலோசித்து வருகிறார்கள்.