திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 12 மே 2021 (23:10 IST)

இன்னும் உயரம் போங்கள் உழைப்பால் - அருண்விஜய்க்கு இயக்குநர் அட்வைஸ்

தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் இணைந்து நடித்து வந்தாலும் மக்கள் மத்தியில் குணச்சித்திர நடிகராக நிலைத்தவர் நடிகர் விஜயகுமார். இவரது மகன் அருண்விஜய்.  விஜய், சூர்யா போன்று ஆரம்ப காலத்திலேயே நடிக்க வந்தாலும் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

பின்னர் மலமல, போன்ற ஆக்‌ஷன் படங்களில் நடித்த அருண்விஜய்க்கு தடையறத் தக்க என்ற படம் திருப்பு முனை ஏற்படுத்தியது.

அதன்பின்னர், அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில அவருக்கு வில்லனாக நடித்தார். பின்னர், குற்றம் கடிதம் போன்ற படங்களில் நடித்தர்.

தற்போது , ஹரி இயக்கத்தில் அருவா என்ற படத்த்ல் அருண்விஜய் ஹீரோவாக நடித்துவருகிறார்.

இந்நிலையில், இயக்குநர் சேரன் இயக்கத்தில் பாண்டவர் பூமி என்ற படத்தில் அருண் விஜய் நடிக்கும்போது, அப்படத்தில் ஒரு உரையால் வரும் அதை மேற்கோள் காட்டி தற்போது அருண்விஜய்க்கு நடிகரும் இயக்குநருமான சேரன் டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், உங்கள் விடாமுயற்சியின் வெற்றிக்கு பாண்டவர் பூமி வசனத்தை ஞாபகப்படுத்தியுள்ளார் குணசேகரன்.. நானும் நினைக்கிறேன் அந்த காட்சியில் அந்த வசனம் அப்பாவே பேசுவதாக அமைந்தது சிறப்பு...  இன்னும் உயரம் போங்கள் உழைப்பால்..எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக அருண்விஜய் இருப்பது குறிப்பிடத்தக்கது.