1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 4 மார்ச் 2015 (15:49 IST)

உத்தம வில்லனில் தோன்றும் இசையமைப்பாளர், பாடலாசிரியர்

மாஸ் ஹீரோக்களின் படங்களில் ஏதாவது ஒரு ஷாட்டில் படத்தின் இயக்குனர், ஒளிப்பதிவாளர் போன்ற முக்கிய தலைகள் தலைகாட்டுவது உண்டு. அதேபோல் உத்தம வில்லனிலும் இருவர் ஒரேயொரு பிரேமில் வந்து போகிறார்கள்.
 
அவர்கள், இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் பாடலாசிரியர் விவேகா.
 
உத்தம வில்லனின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அத்துடன் படத்தின் இரண்டாவது ட்ரெய்லரும் வெளியிடப்பட்டது. அதில் ஜிப்ரான், விவேகா இருவரும் ஒரு கணம் வந்து போகிறார்கள். 
 
இவர்கள் இருவரும் படத்தில் நடிக்கவில்லை. மாறாக ஒரேயொரு காட்சியில் மட்டும் சும்மா வந்து போகிறார்களாம். கமலின் தசாவதாரம் படத்தில் கவிஞர் கபிலன், கவிஞர் கபிலனாகவே நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.