செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: சனி, 28 பிப்ரவரி 2015 (09:35 IST)

நடிப்பு என் உயிர் மூச்சு - அம்மா ஜெனிலியாவின் கலை ஆர்வம்

பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி 2012 -இல் காதலர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்யும்வரை நான்கு மொழிகளில் நான் ஸ்டாப்பாக நடித்தவர் ஜெனிலியா. கடந்த வருடம் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இனி ஜெனிலியா நடிக்கப் போவதில்லை என பலரும் ஆருடம் சொன்ன நிலையில் அதனை மறுத்துள்ளார் ஜெனிலியா.
சினிமாவை விட்டு விலகுவதாக எப்போதும் நான் சொன்னது இல்லை. தற்காலிகமாகத்தான் ஒதுங்கி இருக்கிறேன். 12 வருடங்களாக ஓய்வு இல்லாமல் நடித்தேன். எனவே தான் திருமணத்துக்கு பிறகு கொஞ்ச நாட்கள் ஓய்வு எடுத்தேன். 
 
தற்போது மீண்டும் நடிப்பதற்கு தயாராகி விட்டேன். நடிப்பு என்பது உயிர் மூச்சு போன்றது அதை விடமுடியாது. நடிப்பு மேல் உள்ள காதல் இன்னும் எனக்கு குறையவில்லை. நடிப்பதில் தான் சந்தோஷம் இருக்கிறது. நடித்து ரசிகர்களையும் சந்தோஷப்படுத்துவேன் என அவர் தெரிவித்துள்ளார்.