1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : வியாழன், 3 பிப்ரவரி 2022 (16:13 IST)

இந்த ரொமான்டிக் ஜோடிக்கு ஒரு வாழ்த்து சொல்லுங்க....!

நடிகை ஜெனிலியா தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னட மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். இயக்குனர் ஷங்கர் பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் ஜெனிலியாவை அறிமுகப்படுத்தினார். பின்னர், நடிகர் விஜய், பரத், ஜெயம் ரவி ஆகியோர் படங்களில் நடித்துள்ளார். 
 
சந்தோஷ் சுப்பிரமணியம் ஹாசினியாக குறும்புத்தனம் மிக்கப் பெண்ணாக நடித்து அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தார். இந்தியிலும் ஹிட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் பிரபல பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று தனது 10வது ஆண்டு திருமண நாள் கொண்டாடும் ஜெனிலியா ரித்தீஷ் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு பின் தன்  கணவருடன் சேர்ந்து நடித்து வருகிறார். அழகிய ரொமான்டிக் வீடியோ ஒன்றை வெளியிட்டு தங்களது காதலை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெனிலியா.