1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: சனி, 22 ஜூலை 2017 (14:59 IST)

காயத்ரி ரகுராமை சொர்ணா அக்காவாக்கிய நெட்டிசன்கள்: விக்கிபீடியாவில் அட்டூழியம்!

காயத்ரி ரகுராமை சொர்ணா அக்காவாக்கிய நெட்டிசன்கள்: விக்கிபீடியாவில் அட்டூழியம்!

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் தொலைகாட்சி ஒளிபரப்பி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு சர்ச்சைகள் விமர்சனங்கள் எழுந்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


 
 
இதில் நடிகை ஓவியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவு உள்ளது. பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஓவியாவை நாமினேட் செய்தாலும் மக்கள் அவருக்கு வாக்களித்து தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர்.


 
 
இந்நிலையில் நடிகை ஓவியாவிடம் பிக் பாஸ் போட்டியில் உள்ள சக போட்டியாளரான காயத்ரி ரகுராம் நடந்து கொள்ளும் விதம் அவரது செய்கைகள், பயன்படுத்தும் வார்த்தைகள், அவரது அனுகுமுறை அனைத்தும் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனால் ஓவியா ரசிகர்கள் காயத்ரி ரகுராமை இணையதளத்தில் விமர்சித்து வருகின்றனர். அதில் யாரோ விக்கிபீடியாவில் உள்ள காயத்ரி ரகுராமின் பக்கத்தில் அவருக்கு சொர்ணா அக்கா என்று பெயர் வைத்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.