1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: திங்கள், 14 ஆகஸ்ட் 2017 (12:04 IST)

காயூ பேபி காயூ பேபின்னு சொல்லி இந்த கணேஷ் இப்படி ஆப்பு வச்சுட்டாரே: காயத்ரி ஆர்மி கடுப்பு!

காயூ பேபி காயூ பேபின்னு சொல்லி இந்த கணேஷ் இப்படி ஆப்பு வச்சுட்டாரே: காயத்ரி ஆர்மி கடுப்பு!

நடன இயக்குனரும் நடிகையுமான காயத்ரி ரகுராம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது முதல் அவர் மீது மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். ஆனால் அந்த அதிருப்தி பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களிடமும் தற்போது வந்துள்ளது.


 
 
பிக் பாஸ் வீட்டில் இருந்து ஷக்தி வெளியேறியதை அடுத்து ரைசாவுக்கும் காயத்ரிக்கும் இடையேயான போர் வெளிப்படையாக வெடிக்க ஆரம்பித்துள்ளது. நாமினேஷனில் ரைசாவை கதறவிடலாம் என நினைத்த காயத்ரியை சக போட்டியாளர்கள் அனைவரும் கதறவிட்டுள்ளனர்.
 
இதனால் காயத்ரி செம கடுப்பில் உள்ளார். குறிப்பாக தன் கூடவே நாமினேஷன் பற்றி பேசிக்கொண்டு இருந்த ஆரவ் கூட நாமினேஷனில் காயத்ரிக்கு எதிராக மாறியது காயத்ரிக்கு எரியுற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல இருந்தது.
 
அது மட்டுமா நடந்தது, காயத்ரி ஒரு குழந்தை மாதிரி, காயூ பேபி என மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லிக்கொண்டு இருந்த கணேஷ் கூட காயத்ரிக்கு எதிராக கங்கணம் கட்டி இறங்கி நாமினேஷன் செய்தது காயத்ரிக்கு நிச்சயம் பலத்த அடியாக அமைந்தது.
 
இப்படி பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் தனக்கு எதிராக நாமினேட் செய்ததை கண் குளிர பார்த்த காயத்ரியால் எப்படி இவர்களுடன் வரும் நாட்களில் சகஜமாக இருக்க முடியும். இதனால் இந்த வாரம் காயத்ரி பஞ்சாயத்து நிறையவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ரைசா ட்யூட்டி ஓவர் ட்யூட்டியாக இருக்கும் என பேசப்படுகிறது.