ஞாயிறு, 23 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (14:19 IST)

ஜீ.வி.பிரகாஷ் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் சரத்குமார்

ஜீ.வி.பிரகாஷ் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் சரத்குமார்

சரத்குமார் தனி நாயகனாக நடித்த எந்தப் படமும் ஓடவில்லை.


 


 காஞ்சனா போன்ற படங்களில் கௌரவ வேடங்களில் நடித்தால் மட்டுமே எடுபடுகிறது. பிரபு, பார்த்திபன் போல குணச்சித்திரத்திற்கு முயற்சி செய்கிறார் சரத்குமார்.
 
ஜீ.வி.பிரகாஷ் நடிக்க சண்முகம் முத்துசுவாமி ஒரு படத்தை இயக்குகிறார். இதில் வித்தியாசமான இரு வேடங்களில் நடிக்கிறார் சரத்குமார். நாயகியாக மராத்திய நடிகை வைபவி ஷண்டில்யா நடிக்கிறார். சரத்குமார் இந்த படத்திற்காக வாள் சண்டை பயிற்சியும் மேற்கொண்டு வருகிறாராம். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ், பிளேடு சங்கர், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
 
வழக்கம் போல் நாயகனாக நடிப்பதோடு படத்துக்கு இசையும் அமைக்கிறார் ஜீ.வி.பிரகாஷ்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்