வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 29 டிசம்பர் 2022 (09:15 IST)

“துணிவு படத்தில் நடித்துள்ளேன்…” ஜி பி முத்து பகிர்ந்த சீக்ரெட்!

டிக்டாக் மூலமாக பிரபலம் ஆன ஜி பி முத்து ஆரம்பத்தில் ட்ரோல்களுக்கும், கேலிகளுக்கும் ஆளானார். ஆனால் தன்னுடைய இயல்பான பேச்சாலும், வெகுளித்தனத்தாலும், இன்று முன்னணி யுடியூபர் ஆகி இருக்கிறார்.

சமீபத்தில் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த ஆண்டிற்காக பிக்பாஸ் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் தன் குழந்தைகளை விட்டு இருக்க முடியாது என்று சொல்லி, அவர் வெளியேறினார். அதையடுத்து தொடர்ந்து சமூகவலைதளங்களில் வீடியோக்களைப் பகிர்ந்துவரும் அவர், இப்போது சினிமாவிலும் நடிக்க தொடங்கியுள்ளார். 

அவர் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் என்ற திரைபடம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து அதன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் “துணிவு படத்தில் நான் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளேன். அஜித் சாரோடு நடிக்கவில்லை. அதனால் துணிவு படத்தைதான் முதலில் பார்ப்பேன். பின்னர் விஜய் சாரின் வாரிசு படத்தைப் பார்ப்பேன். அஜித் சாரின் விஸ்வாசம் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம்” எனக் கூறியுள்ளார்.