வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 2 ஜூலை 2017 (22:11 IST)

திரையரங்கு வேலைநிறுத்தம் உறுதி: நடுத்தெருவுக்கு போகும் நட்சத்திரங்கள்

ஜிஎஸ்டி வரிமுறையில் 28% வரிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசின் கேளிக்கை வரியான 30% வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் நாளை திங்கள் முதல் திரையரங்குகள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.



 
 
ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களிடம் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து திரையரங்க உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் திட்டமிட்டபடி நாளை முதல் வேலைநிறுத்தம் தொடரும் என அபிராமி ராமநாதன் சற்று முன்னர் உறுதி செய்தார். எனவே நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படுகின்றன.
 
இந்த நிலையில் 'அதாகப்பட்டது மகாஜனங்களே' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி, 'இவன் தந்திரன்' படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரான ஆர்.கண்ணன் உள்பட பல திரை நட்சத்திரங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் ஒருசில சின்ன பட்ஜெட் படத்தின் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வரும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.