1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : சனி, 11 மார்ச் 2017 (11:40 IST)

சுசித்ரா, மடோனாவை தொடர்ந்து ஹேக் செய்யப்படும் பிரபலங்களின் டுவிட்டர் கணக்கு!

சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. தனது கணவர் கார்த்திக்கின் ட்விட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக சுசித்ரா கூறினார். அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன் நடிகை மடோனா செபாஸ்டியனின் ஃபேஸ்புக் பக்கமும் ஹேக் செய்யப்பட்டது.

 
தொடர்ந்து இப்படி அடுத்தடுத்து சினிமா பிரபலங்களின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின் நடிகை மடோனா உட்பட பல  நடிகர்களின் டுவிட்டர் கணக்குகளை ஹேக் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
 
அந்த வரிசையில் தற்போது நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர்.  அதனால் அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.
 
அந்த ஹேக்கர் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு மெசேஜ் செய்து பேடிஎம் கணக்கில் 10 ஆயிரம், 5 ஆயிரம் டெபாசிட் செய்யுங்கள் என கேட்டுள்ளான். அதன்பின் தான் அவருக்கு தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.