அஜித் பிறந்த நாள் கொண்டாடிய ஐந்து ரசிகர்கள் அதிரடி கைது
நேற்று முன் தினம் அஜித் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் அவரது 46வது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடினர். மதுரையில் அஜித் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் கொண்டாட்டம் இருமடங்காக இருந்துள்ளது.
இந்த நிலையில் மதுரை பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தெருவில் அஜித் ரசிகர்கள், அஜித்தின் பாடல்களை சத்தமாக போட்டு ஆட்டம் பாட்டு என கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு முதியவர் தனது தூக்கத்திற்கு இடைஞ்சலாக இருப்பதாகவும் பாடலின் சவுண்டை குறைத்து வைக்கும்படியும் கேட்டுள்ளார்.
இதற்கு அஜித் ரசிகர்கள் முடியாது என்று கூற, பதிலுக்கு முதியவர் அஜித் குறித்து ஏதோ கூறியதால் ஆத்திரம் அடைந்த அஜித் ரசிகர்கள் முதியவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதியவரின் புகாரின் அடிப்படையில் மதுரை காவல்துறையினர் ஐந்து அஜித் ரசிகர்களை கைது செய்துள்ளனர்.