1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2017 (23:04 IST)

போடீ, நீ போடீ: வச்சு செஞ்ச ஓவியா! வயிற்றெரிச்சலில் ஜூலி

கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று முதன்முதலாக ஓவியா ஆத்திரமடைந்துள்ளார். நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளில் இருந்து சிரித்த முகத்துடன் அனைவரின் மனங்களையும் கவர்ந்த ஓவியாவை இன்று பொறுமை இழக்கும் அளவிற்கு அனைவரும் கடுப்பேற்றினர்.



 
 
இதனால் பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த ஓவியா, ஜூலியை போட்டி, நீ போடீ என்று ஆத்திரத்துடன் கத்தி வச்சு செஞ்சார். இதற்கு ஜூலி வழக்கம்போல தனது அழுகை நடிப்பை தொடர்ந்தார்.
 
இன்றைய நிகழ்ச்சியில் ஓவியாவை நமீதாவும், காயத்ரியும் எப்படியாவது வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகின்றனர். கூடுமானவரை ஓவியா பொறுமை காத்து வருகின்றார். காடு மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். ஓவியா அனைவருக்கும் எதிராக எப்போது பொங்கி எழப்போகிறார் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.