திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (04:18 IST)

ஜி.வி.பிரகாஷ்-ஆதிக் படத்தில் புகுத்தப்பட்ட முதல் புதுமை

இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு திரைப்படம் 2D அல்லது 3D தொழில்நுட்பத்தில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதல்முறையாக ஒருதிரைப்படம் முதல் பாதி 2D தொழில்நுட்பத்திலும், இரண்டாம் பாதில் 3D தொழில்நுட்பத்திலும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' படத்தை அடுத்து சிம்புவின் AAA படத்தை இயக்கி படுதோல்வி அடைந்த இயக்குனர் ஆதிக், தற்போது மீண்டும் ஜி.வி.பிரகாஷூடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் கதைப்படி இரண்டாம் பாதியில் 3D தொழில்நுட்பம் தேவைப்படுவதால் முதல் பாதி 2Dயிலும், இரண்டாம் பாதி 3Dயிலும் உருவாக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் முதன்முதலில் புகுத்தப்பட்ட இந்த புதுமை ரசிகர்களிடம் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்