வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By SInoj
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2024 (22:40 IST)

ஃபேமிலி ஸ்டார்: நெகட்டிவ் ரிவியூ கொடுத்தவர்கள் மீது படக்குழு புகார்

Familiy Star
ஃபேமிலி ஸ்டார் படம் பற்றி  நெகட்டிவ் ரிவியூ  கொடுத்ததால்தான் படம் வசூலாகவில்லை என்று படக்குழு புகார் கூறிவருகிறது.
 
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய்தேவரகொண்டா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஃபேமிலி ஸ்டார். இப்படத்தில் அவருடன் இணைந்து மிர்ணாள் தாகூர், திவ்யன்ஷா கவுசிக், ரோகினி ஹட்டன்கடி, அஜய் ஜோஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தை பரசுராம்  இயக்கியிருந்தார். கோபி சுந்தர் இசையமைக்க,  இப்படத்தை வாரிசு பட தயரிப்பாளர் தில் ராஜூ தயாரித்திருந்தார்.
 
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி ரிலீஸானது.
ஆனால், இப்படம் போதிய வரவேற்பை பெறவில்லை என தெரிகிறது.
 
இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக  இப்படம் பற்றிய ரிவியூ  நெகட்டிவ் கொடுத்ததால்தான் படம் வசூலாகவில்லை என்று படக்குழு புகார் கூறிவருகிறது.
 
விஜய் தேவரகொண்டா யாரெல்லாம் இப்படம் பற்றி ரிவியூ கொடுத்தார்களோ அவர்களின் பெயர்களை குரிப்பிட்டு புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.