சண்டை காட்சியில் டூப் இல்லாமல் நடித்த கடம்பன் பட ஹீரோ, ஹீரோயின்!
கடம்பன் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருப்பவர் ராகவா. ஆர்யா, கேத்தரின் தெரசா நாயகன் நாயகியாக நடித்திருக்கின்றனர். ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ், ஆர்யாவின் பீப்பிள் பட நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
இப்படம் பற்றி இயக்குனர் கூறுகையில், ‘கடம்பன்’ படத்தின் கதை மலைவாழ் மக்களின் வாழ்க்கையை பற்றியது. இயற்கை வளத்தை அழித்தால் ஏற்படும் பாதிப்பை விளக்குவது இந்த படத்தின் கரு.
வனக்கடவுள் முருகனின் மற்றொரு பெயர் கடம்பன். இந்த படத்தில் நடிக்க ஆர்யாவிடம், ஒரு கடவுள் அனுமன் படத்தை காட்டி இது போல் உங்கள் உடல் அமைப்பை மாற்ற வேண்டும் என்றேன். இதற்காக அவர் இரண்டே மாதத்தில் கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் அமைப்பை மாற்றினார்.
நாயகனும், நாயகியும் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார்கள். திலீப்புராயன் சிறப்பாக பயிற்சி அளித்தார். மேலும் ஆர்யா காலில் செருப்பு அணியாமலும் நடித்துள்ளார். படம் முழுக்க வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. படக்குழுவினர் அனைவரும் படப்பிடிப்பு கருவிகளை ஒத்தையடி பாதையில் எடுத்து சென்றோம். ஒரே காட்சியில் இத்தனை யானைகள் இடம் பெறுவது இந்த படத்தில் தான். ‘கடம்பன்’ ஒரு வெற்றி படமாக அமையும், அனைவராலும் அதிகம் பேசப்படும் படமாக அமையும் என்றார்.