செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 9 நவம்பர் 2020 (12:16 IST)

கமல் டீசரைப் பாராட்டிய விஜய் சேதுபதி… ரசிகர்கள் வைத்த கோரிக்கை!

கமலின் விக்ரம் பட டீசரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பகிர்ந்து பாராட்டிய நிலையில் அவருக்கு ரசிகர்கள் ஒரு கோரிக்கையை வைத்துள்ளனர்.

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் கடந்த 7 ஆம் தேதி கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இந்த டீசர் நார்கோஸ் சீரியலின் காப்பி என சொல்லப்பட்டாலும், ரசிகர்கள் வெகுவாக ரசித்துவருகின்றனர். மேலும் நடிகர் விஜய் சேதுபதியும் டீசரைப் பகிர்ந்து சிறப்பு எனப் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதன் கீழே ரசிகர்கள் கமலுக்கு வில்லனாக நடியுங்கள் என அவருக்கு கோரிக்கை வைக்க ஆரம்பித்துள்ளனர். ஏற்கனவே தேவர் மகன் பார்ட் 2 வான தலைவன் இருக்கின்றான் படத்தில் கமலுடன் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.