எல்லை மீறி போகும் காதல் - அம்பலமான பிக்பாஸ் ப்ரோமோ!

Last Modified வெள்ளி, 19 ஜூலை 2019 (13:14 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோவில் கவின் சாக்ஷி காதல் மோசமாக போய்க்கொண்டிருக்கிறது. இதனால் பார்வையாளர்கள் வெறுப்படைந்துவிட்டனர். 


 
ஜெயிலுக்குள் இருக்கும் சாக்ஷியிடன்  கவின் " நான் உன்னை மிகவும் மிஸ் பண்ணுறேன் மச்சான் என கூறுகிறார். உடனே சாக்ஷி கடுப்பாகி இத்துடன் இதை முடித்துக்கொள்வோம் என்று கூறுகிறார். இதனை கேட்ட உடனே கவின் " எவ்வளவு பெரிய வார்த்தையை என்னிடம் சொல்லுற என்று கேட்க  அதற்கு சாக்ஷி " நீ எவ்வளவு பெரிய வார்த்தையை என்னிடம் சொல்லி இருக்கிறாய், நன் எல்லாரிடமும் ஜாலிக்காக தான் பேசுகிறேன் என்று,  என கேட்கிறார் .
 
பின்னர் கவின் "மச்சான் என்னை மன்னிச்சுடு மச்சான்" இதற்கு தான் நான் அப்போதே சொன்னேன் ரொம்ப பழக வேண்டாம் என்று இப்போ பாரு எங்க வந்து முடியுதுன்னு என்று கூறி கண்கலங்கி அழுகிறார். 
 
இவர்களின் இந்த காதலால் பார்வையாளர்கள் செம்ம கடுப்பில் இருக்கிறார்கள். 
 


இதில் மேலும் படிக்கவும் :