1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 30 ஜூன் 2021 (17:33 IST)

பிரபல நடிகர் மருத்துவமனையில் அனுமதி !

பிரபல பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தி சினிமாவில் மூத்த நடிகர் நஸ்ருதீன் ஷா. இவர்  தி வெட்னஸ் டே( தமிழில் கமல் நடித்த உன்னைப் போல் ஒருவன்). ஹேராம், கிரிஸ் உள்ளிட்ட பல பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தென்னிந்திய சினிமாவிலும் இவர் நடித்துள்ளார். இவருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜூன் 29 ஆம் தேதி திடீரென்று உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் நஸ்ருதீன் ஷா மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் கொரொனா உள்ளிட்ட அறிகுறிகள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளதால் அவரது குடும்பத்தினரும், ரசிகர்களு ஆறுதல் அடைந்துள்ளனர்.