1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 8 ஜூன் 2017 (20:23 IST)

உடம்பெல்லாம் வெடித்து பரிதாபமாக உயிரிழந்த காமெடி நடிகர்

தோற்றம் மூலம் ரசிகர்களை மகிழ்வித்த சகோதரர்கள் சகாதேவன், மகாதேவன். தம்பி சகாதேவன் உடம்பெல்லாம் வெடித்து மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.


 

 
பாக்கியராஜ் இயக்கித்தில் வெளியான சுந்தர காண்டம் படத்தில் காமெடி நடிகர்களான சகாதேவன் மற்றும் மகாதேவன் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். இயற்கையாகவே இவர்கள் இருவரது உடல் எடை அதிகமக இருந்தது. இவர்களது தோற்றமே இவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கியது.
 
இவர்களது உடல் எடை அதிகரிப்பு காரணம் உணவு இல்லை, மரபு ரீதியான நோய் என கூறப்பட்டது. சரியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாத காரணத்தினால் இருவரும் உடல் எடையை கட்டுப்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். 
 
அண்ணன் மகாதேவன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். தம்பி சகாதேவன் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். சர்க்கரை நோய் காரணமாக அவரது காலில் புண் ஏற்பட்டு, கால் துண்டிக்கப்பட்டது. உடலில் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளது.  
 
இதையடுத்து அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.