திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2017 (22:15 IST)

விஸ்வரூபம் 2' டிரைலர் குறித்து கமல்ஹாசன் கூறிய அதிரடி கருத்து

உலக நாயகன் கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2' திரைப்படத்தின் டிரைலர் குறித்து வெளிவரும் செய்திகள் தவறானவை என்றும் இதை விளக்க வேண்டிய கடமை ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு உள்ளது என்றும் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.



 


இன்று காலை முதல் விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் வரும் ரம்ஜான் திருநாளில் வெளியாகவுள்ளதாக பல இணையதளங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த செய்திகளைத்தான் கமல்ஹாசன் தவறான தகவல் தருவதாக கூறியுள்ளார். விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் டிரைலர் மற்றும் படம் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரபூர்வமான தகவல் வெளிவரும் என்றும் கமல் தரப்பு தெரிவித்துள்ளது.