1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வியாழன், 29 ஜூன் 2017 (13:23 IST)

இப்படி மாட்டிக்கிட்டீங்களே: பிக் பாஸ் நிகழ்ச்சியின் லட்சணம் அம்பலம்; ஆனால் நடந்தது வேறு! (வீடியோ)

இப்படி மாட்டிக்கிட்டீங்களே: பிக் பாஸ் நிகழ்ச்சியின் லட்சணம் அம்பலம்; ஆனால் நடந்தது வேறு! (வீடியோ)

சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாக பேசப்படும் முக்கியமான டாப்பிக்காக பிக் பாஸ் நிகழ்ச்சி உள்ளது. பாலிவுட்டில் மிகவும் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் நடிகர் கமல் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சி இதனை ஒளிபரப்புகிறது.


 
 
இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது முதல் இந்த நிகழ்ச்சியின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளது. விஜய் தொலைக்காட்சி தன்னுடைய டிஆர்பியை உயர்த்திக்கொள்ள திட்டமிட்டு ஏற்கனவே ஜோடிக்கப்பட்டு தான் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது என சமூக வலைதளங்களில் பரவலகா பேசப்பட்டது.
 
இந்த நிகழ்ச்சியின் முக்கிய விதிமுறைகளில் ஒன்று இதில் பங்கு பெறுபவர்களுக்கு எந்தவித வெளியுலக தொடர்பும் இருக்காது, மொபைல் ஃபோன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்படுத்த அனுமதி இல்லை.
 
ஆனால் இவை பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிக் பாஸ் வீட்டில் தங்கியுள்ள நடிகர் ஸ்ரீ தனது கையில் மொபைல் ஃபோனை வைத்துக்கொண்டு எதோ பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

 

 
 
இதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நம்பகத்தன்மை தற்போது கேள்விக்குள்ளாகி உள்ளது. சமூக வலைதளங்களில் இந்த நிகழ்ச்சி குறித்து பல எதிர்மறையான கருத்துக்கள் வர ஆரம்பித்துள்ளது. ஆனால் உண்மையில் நடிகர் ஸ்ரீ மொபைல் போன் உபயோகப்படுத்தவில்லை.


 
 
நடந்ததே வேறு, நடிகை காயத்ரி ரகுராம் கோபமாக பேசிக்கொண்டு இருக்கும் அருகில் இருக்கும் நடிகர் ஸ்ரீ தான் உண்டு தன் வேலையுண்டு என வழக்கம் போல அமைதியாக தனது கைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கிறார். இந்த வீடியோவை யாரோ வதந்தி பரப்புவோர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதில் மொபைல் போன் ஒன்றை நடிகர் ஸ்ரீயின் கையில் வைத்து எடிட் செய்து சமூக வலைதளத்தில் ஸ்ரீ மொபைல் போன் பயன்படுத்துவது போல பரப்பி விட்டுள்ளனர். இந்த வதந்தி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.