வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (08:40 IST)

விபத்தினால் எனக்கு ஏற்பட்ட லாபம் இதுதான்… பஹத் பாசில் கருத்து!

நடிகர் பஹத் பாசில் நடிப்பில் உருவான மாலிக் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது.

இப்போது அதற்கான ப்ரமோஷன் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அது சம்மந்தமான ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது மலையன் குஞ்சு படப்பிடிப்பின்போது தனக்கு நடந்த விபத்து பற்றி பேசியுள்ளார். அதில் ‘விபத்திலிருந்தும் நான் தேறி வருகிறேன்.  விபத்து நடந்ததில் இருந்தே எனக்கு ஊரடங்குதான். மருத்துவர் நான் ஆபத்தின் அருகே சென்று திரும்பியதாக கூறினார். உடலின் தன்னிச்சையான செயலின் காரணமால நான் கீழே விழும்போது கையை முதலில் வைத்துவிட்டேன். 80 சதவிதம் பேர் செய்யத் தவறும் விஷயம் இது. இதனால் என் மூக்கில் 3 தையல்கள் போடும் அளவுக்கு சிறிய காயம் ஏற்பட்டது. தையல் போட்ட இடத்தில் உள்ள தழும்பு  மறைய சில நாட்கள் ஆகும். விபத்தில் கிடைத்த அதிகபட்ச லாபம் இதுதான்’ எனக் கூறியுள்ளார்.