1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: ஞாயிறு, 21 மார்ச் 2021 (10:27 IST)

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்தின் வில்லன் அறிவிப்பு!

அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்தின் வில்லன் அறிவிப்பு!
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா’ இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்தப் படத்தில் நாயகனுக்கு இணையாக வில்லன் கேரக்டர் இருக்கும் என்பதால் அந்த கேரக்டரில் நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் வில்லன் கேரக்டர் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த படத்தின் வில்லனாக பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
அல்லு அர்ஜுன் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இந்த படத்தில் ஜெகபதி பாபு பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி மற்றும் கனடா ஆகிய 5 மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது