1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 ஜூலை 2021 (11:18 IST)

இந்த படம்தான் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது… பஹத் பாசில் வெளியிட்ட ரகசியம்!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர் நடித்துள்ள மாலிக் என்ற எதிர்பார்ப்புக்குரிய படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மே மாதம் 13 ஆம் தேதி மாலிக் படம் உலகமெங்கும் ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மறுபடியும் திரையரங்குகள் மூடப்பட்டதால் ரிலீஸ் தடைபட்டது. இந்நிலையில் இந்த படம் உருவாகி நீண்ட காலம் ஆகிவிட்டதால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் ஓடிடியில் ரிலிஸ் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக அந்த படக்குழுவினர் இப்போது ஓடிடி தளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர், ஏற்கனவே பஹத் பாசிலின் சி யு சூன் மற்றும் ஜோஜி ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலிஸ் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது மாலிக் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் பஹத் பாசில் தான் நடித்த படங்களிலேயே மாலிக் படத்தில் நடிக்கதான் மிகவும் கஷ்டப்பட்டதாகக் கூறியுள்ளார்.