என்னை அறிந்தால் படத்துடன் மோதும் சண்டமாருதம்


Suresh| Last Updated: ஞாயிறு, 18 ஜனவரி 2015 (13:03 IST)
அஜீத் நடித்திருக்கும் என்னை அறிந்தால் ஜனவரி 29 வெளியாகிறது. அந்த தேதியில் பிற படங்கள் எதுவும் வெளியாகப் போவதில்லை என்றுதான் அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

 

இந்நிலையில் சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் சண்டமாருதம் ஜனவரி 30 - என்னை அறிந்தால் வெளியானதற்கு மறுநாள் திரைக்கு வருகிறது.
 
நான்கு வருடங்களுக்குப் பிறகு சரத்குமார் தனி ஹீரோவாக நடித்துள்ள படம், சண்டமாருதம். இதன் கதையை சரத்குமாரே எழுதியுள்ளார். திரைக்கதை, வசனம் ராஜேஷ் குமார்.
 
ஓவியா, மீரா நந்தன், சமுத்திரகனி, ராதிகா சரத்குமார் நடித்துள்ள இந்தப் படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். மேஜிக் ப்ரேம்ஸ் சார்பில் ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன், சரத்குமார் ஆகியோர் கூட்டாக தயாரித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :