திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 13 ஜனவரி 2022 (15:46 IST)

என்ன சொல்லப் போகிறாய்… ஸ்பெஷல் ஷோ போட்டு கேன்சல் ஆகி அவமானம்!

என்ன சொல்லப் போகிறாய் படத்துக்கு ஸ்பெஷல் ஷோ எல்லாம் வாங்கியுள்ளது படக்குழு.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடித்துள்ள என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படம் இன்று ரிலீசாகி இருக்கும் நிலையில் ட்விட்டரில் இந்த படத்தின் விமர்சனங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. படம் செம்ம மொக்கை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் அள்ளுமென நினைத்து தயாரிப்பாளர் சிறப்புக் காட்சி எல்லாம் வாங்கியுள்ளாராம். ஆனால் படத்துக்கு சுத்தமாக கூட்டமே இல்லாததால் 9 மணிக் காட்சி எல்லாம் ரத்து செய்யப்பட்டு விட்டதாம். தேவையில்லாமல் பல்ப் வாங்கியுள்ளது படக்குழு.