செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 8 மார்ச் 2017 (13:41 IST)

ஷூட்டிங்கின் போது மயங்கி விழுந்து பிரபல நடிகை மரணம்!

பெங்களூருவில் டிவி தொடர் ஷூட்டிங்கில் இருந்த பிரபல கன்னட நடிகை பத்ம குமுதா மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58. சோமன துதி என்ற கன்னட படத்திற்காக தேசிய விருது பெற்றவர். பல படங்களில் நடித்த அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

 
கடந்த திங்கட்கிழமை அவர் தொலைக்காட்சி தொடர் ஒன்றின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அப்போது அவர் திடீர் என மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தது தெரிய வந்துள்ளது. 
 
நடிகை பத்ம குமதாவுக்கு கணவர், மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். திறமையான நடிகையான குமுதாவின் மறைவுக்கு கன்னட திரையுலகினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.