1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 1 மார்ச் 2024 (07:08 IST)

ஹாலிவுட்டில் ரீமேக் ஆகும் முதல் இந்திய படமாக சாதனை படைத்த திரிஷ்யம்!

மோகன் லால் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.

அதையடுத்து இரண்டாம் பாகமும் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் திரிஷ்யம் திரைப்படம் சைனீஸ் மற்றும் ஹாலிவுட் உள்ளிட்ட உலகின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் உலக ரீமேக் உரிமையை பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் இயக்குனர் ஜீத்து ஜோசப் திரிஷ்யம் விரைவில் கொரியன் மொழியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் இப்போது ஹாலிவுட்டிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்திய மொழியில் இருந்து ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்படும் திரைப்படமாக திரிஷ்யம் சாதனை படைக்கவுள்ளது.