1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: சனி, 10 ஜூன் 2017 (11:35 IST)

தனுஷின் ஆசை என்னனு தெரியுமா?

‘ஸ்டாராக இருக்க விரும்புவதுதான் என்னுடைய ஆசை’ எனத் தெரிவித்துள்ளார் தனுஷ்.

 
நடிகராக சினிமாவில் அறிமுகமாகி, பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல படிநிலைகளைக்  கடந்து உயரத்துக்கு வந்திருக்கிறார் தனுஷ். தற்போது, ஹாலிவுட் படத்தில் நடிக்கும் அளவுக்கு தன்னுடைய திறமையை உயர்த்திக் கொண்டுள்ளார். அவர் ஹீரோவாக அறிமுகமானபோது ஏளனமாகச் சிரித்தவர்கள், இப்போது எங்கிருக்கிறார்கள்  என்றே தெரியவில்லை.
 
‘உங்களை ஸ்டார் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறீர்களா? இல்லை, நடிகர் என்று குறிப்பிட்டாலே போதுமா?’ என்று கேட்டால், “இரண்டுமாகவே இருக்க விரும்புகிறேன். கிட்டத்தட்ட 17 வருடங்களாக சினிமாவில் கடுமையாக உழைத்து வருகிறேன். இன்றும் கூட அப்படித்தான் உழைத்துக் கொண்டு இருக்கிறேன். இதற்காக நிறைய விஷயங்களைத் தியாகம்  செய்துள்ளேன். குறிப்பாக, குடும்பத்தினருடன் செலவிட நேரம் கிடைப்பதில்லை. நீங்கள் வேண்டுமானால் இதை மட்டமான விஷயமாக நினைக்கலாம். ஆனால், நான் ஸ்டாராக இருக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் தனுஷ்.