பிறந்தநாளை கொண்டாட வேண்டாம்... கமல் ரசிகர்களுக்கு வேண்டுகோள்
முதல்வர் உடல்நலக்குறைவாக இருக்கும் நிலையில், என்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று கமல் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
நவம்பர் 7 கமலின் பிறந்தநாள். அதனை முன்னிட்டு ட்விட்டரில் செய்தி ஒன்றை கமல் வெளியிட்டுள்ளார். நற்பணி இயக்கத் தோழர்களுக்கு கோரிக்கை. தமிழக முதல்வரின் உடல்நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாக்களைத் கண்டிப்பாய் தவிர்க்க வேண்டுகிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.