1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : சனி, 5 செப்டம்பர் 2015 (13:14 IST)

தீபாவளிக்கு வெளியாகும் தனுஷ் படம்

தீபாவளிக்கு படத்தை வெளியிடுவது நடிகர்களுக்கு ஒரு கௌரமாகவே பார்க்கப்படுகிறது. கூடுதலாக கரன்சியையும் அள்ளலாம். இந்தத் தீபாவளிக்கு தனுஷ் நடித்தப் படம் வெளியாகிறது.
 
வேலையில்லா பட்டதாரி டீம் அப்படியே இன்னொரு படத்தை உருவாக்கியிருக்கிறது. தனுஷ், சமந்தா, ஏமி ஜாக்சன், ராதிகா நடித்துள்ள இந்தப் படத்தை வேல்ராஜ் இயக்கியுள்ளார்.
 
அனிருத் இசை. தயாரிப்பு தனுஷின் வுண்டர்பார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கப்படாத நிலையில், வேலையில்லா பட்டதாரி பார்ட் 2 என்றே இந்தப் படம் குறிக்கப்படுகிறது. ஆனால், அந்தப் படத்துக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
 
படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதாக திட்டம். கமலின் தூங்கா வனம், சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படம் ஆகியவையும் தீபாவளியை குறி வைத்துள்ளதால் கடைசிநேர மாறுதல்களை எதிர்பார்க்கலாம்.