1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Updated : திங்கள், 24 ஏப்ரல் 2017 (15:12 IST)

கறார் கண்டிஷன் போடும் திவ்யதர்ஷினி - எதற்கு தெரியுமா?

தனக்கு பிடித்தமான கதாபாத்திரம் அமைந்தால், சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என சின்னத்திரை புகழ் டிடி (திவ்யதர்ஷினி) கூறியுள்ளார்.

 

 
நடிகர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தில், ரேவதியின் மகளாக நடித்திருந்தார் டி.டி. ஒரு சில காட்சி என்றாலும், பழைய காதலை அசை போடும் தன் தாய் ரேவதியிடம், எதிர்ப்பு தெரிவிக்காமல், வயதான காலத்தில் ஒரு துணை வேண்டும் என அவர் பாஸிட்டிவாக பேசி நடித்திருப்பது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 
 
மேலும், பல இயக்குனர்கள் அவரை தொடர்பு கொண்டு,  தங்கள் படங்களில் நடிக்க அழைத்துள்ளனர். ஆனால், நடிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. சில காட்சிகளில் வந்தாலும், நடிப்பிற்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும். அதேபோல், சின்னத்திரை மூலம் எனக்கு ஏற்பட்டுள்ள இமேஜை கெடுப்பது போல் காட்சிகள் இருக்கக் கூடாது. நீங்கள் கூறும் கதாபாத்திரம் என்னை இம்பிரஸ் செய்தால் நடிப்பேன். இல்லையெனில் நடிக்க மாட்டேன்” என கண்டிஷன் போடுகிறாராம் டிடி.