செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vm
Last Updated : வியாழன், 4 அக்டோபர் 2018 (18:15 IST)

தேசதுரோக வழக்கு போட்ட பின்பும், தில்லாக மோடியை கடுமையாக விமர்சித்த திவ்யா

கடந்த செப்டம்பர் 24-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பொறுப்பாளர் திவ்யா ஸ்பந்தனா தனது ட்விட்டரில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்தார்.

ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட அந்த படத்தில் பிரதமர் மோடி அவரது மெழுகுச் சிலையில் நெற்றியில் இந்தியில் திருடன்  என்று எழுதுவது போல்
உருவகப்படுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் சையீது ரிஸ்வான புகார் அளித்தார். அதன் பேரில் உ.பி., போலீஸார் திவ்யா ஸ்பந்தனா மீது ஐடி சட்டப்பிரிவு 67, சட்டப்பிரிவு 124 ஏவின் கீழ் தேசத்துரோக வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து திவ்யா தனது ட்விட்டரில் மீண்டும் #PMChorHai என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி கருத்து ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

அவர் தனது ட்விட்டரில்,* "எனக்கு ஆதரவு தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. அந்த ட்வீட்டை பிடிக்காதவர்களுக்கு நான் என்ன சொல்ல முடியும்? அடுத்த முறை
வேண்டுமானால் நீங்கள் 'மெச்சும்படி' ஒரு ட்வீட்டை பதிவிடுகிறேன்.
இந்தியாவில் தேசதுரோக வழக்கு ரத்து செய்ய வேண்டும். இது அராஜகமானது. மேலும் துஷ்பிரயோகம் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. என் மீது எஃப்ஐஆர் பதிவு செய்தவர்களுக்காக இதை மீண்டும் சொல்கிறேன். #PMChorHai" *எனப் பதிவிட்டுள்ளார்.