திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 28 ஏப்ரல் 2018 (13:24 IST)

சொந்தக் கையில் சொர்க்கம் காண்போம் - என்ன சொல்கிறார் இயக்குனர்?

பாலியல் பலாத்காரங்களை தவிர்க்க, இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
நடிகர் கௌதம் கார்த்திக் ஹிரோவாக நடித்து, விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் இருட்டு அறையில் முரட்டுக்குத்து. தலைப்பை பார்த்தாலே இது கிளுகிளுப்பு படம் எனப்புரிகிறது. இளசுகளை மட்டும் குறி வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு தணிக்கை துறை ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது.
 
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. அப்போது இது ஒரு அடல்ட் மூவி. எனவே, குடும்பத்துடன் பார்க்க வேண்டாம். தனியாக பாருங்கள் என இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்தார்.
 
நாடு முழுவதும் பாலியல் பலாத்காரங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்ற படங்கள் தேவையா? என படத்தின் இயக்குனர் சந்தோஷிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சந்தோஷ்‘ அதான் படத்திலேயே சொல்லியிருக்கோமே சார்... சொந்தக் கைகளால் சொர்க்கம் காண்போம்னு’ என்று சிரித்தபடி கிண்டலாக பதிலளித்தார்.
 
ஆவது, சுய இன்பம் செய்தால் பாலியல் பலாத்காரங்கள் குறையும் என்கிற ரீதியில் அவர் கருத்து தெரிவிக்கிறார். இது பல செய்தியாளர்களை முகம் சுழிக்க வைத்தது.