1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Modified: புதன், 2 ஏப்ரல் 2014 (12:27 IST)

தெகிடி சீக்வெல் கட்டாயம் வரும்

சமீபத்தில் வெளியான க்ரைம் த்ரில்லரில் தெகிடிக்கு நல்ல பெயர். மோசமில்லாத வசூலும். படத்தை இயக்கிய பி.ரமேஷ் தெகிடியின் சீக்வெல் கண்டிப்பாக வரும், ஆனால் உடனே இல்லை என்று கூறினார்.
அசோக் செல்வன், ஜனனி அய்யர் நடித்த தெகிடி தெலுங்கிலும் வெளியாகி பரவலான கவனிப்பை பெற்றது. இந்தப் படம் வெளியாகும் முன்பே இதன் சீக்வெலை எடுப்பது என முடிவு செய்ததாக பி.ரமேஷ் கூறினார். ஆனால் சீக்வெல் முயற்சி உடனே இருக்காது என்றும் தெரிவித்தார்.
 
தற்போது புது ஸ்கிரிப்ட் ஒன்றை எழுதி வருகிறார். அது படமான பிறகு தெகிடி சீக்வெலை ரமேஷ் எடுப்பார் என தெரிகிறது.