எனக்கும் அஜித்துக்கும் போன ஜென்மத்தில் இருந்தே பழக்கம். காமெடி நடிகர்

sivalingam| Last Modified வியாழன், 20 ஏப்ரல் 2017 (23:15 IST)
அஜித், விஜய் படங்கள் உள்பட பல திரைப்படங்களில் காமெடி வேடம் ஏற்று நடித்தவர் ரமேஷ் கண்ணா. இவர் ஒரு இயக்குனர் என்பது பலருக்கு தெரியாத உண்மை ஆகும். இவர் இயக்கிய முதல் படமான 'தொடரும்' படத்தில் அஜித், தேவயானி நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது முதல் படத்தில் அஜித் நடித்தது குறித்து ரமேஷ்கண்ணா குறிப்பிடும்போது, 'நான் இயக்க வந்தபோது தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட்டில் இருந்தார் அஜித். இருப்பினும் அறிமுக இயக்குநர் என நினைக்காமல் என்னுடைய இயக்கத்தில் அஜித் நடிக்க ஒப்புக் கொண்டது அவரது பெருந்தன்மையை விளக்குகிறது.

மேலும் எனக்கும் அஜித்துக்கும் போன ஜென்ம பந்தம் இருக்கும் என நான் நினைக்கிறேன். நான் இயக்கிய முதல் படத்தில் அவர் நடித்தது மட்டுமின்றி, அவருடைய நிறைய படங்களில் நான் காமெடி ரோலில் நடித்திருக்கிறேன்' என்று ரமேஷ் கண்ணா உருக்கத்துடன் பேசியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :