வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 ஏப்ரல் 2021 (08:40 IST)

ஒரு தவறால் ஐந்து வருடம் தண்டனை அனுபவித்தேன்… சிவகார்த்திகேயன் பட இயக்குனர் ஆதங்கம்!

இயக்குனர் பொன்ராம் சிவகார்த்திகேயனை வைத்து தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கி பிரபலம் ஆனவர்.

சிவகார்த்திகேயனின் சந்தை மதிப்பை நிலைநாட்டிய படங்களில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்துக்கு முதன்மையான இடம் உண்டு. அதன் பின்னர் அவரை வைத்து ரஜினி முருகன் மற்றும் சீமராஜா ஆகிய படங்களை இயக்கினார். இப்போது எம்ஜிஆர் மகன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் தனது முதல் படமான  ஹரிகுமார் நடித்த திருத்தம் என்ற படத்தில் நிகழ்ந்த தவறு பற்றி கூறியுள்ளார்.

சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் அவர் அளித்த நேர்காணலில் ‘அப்போது திருத்தம் கதை போலவே நான் அவன் இல்லை படம் உருவாகிக் கொண்டு இருந்தது. அதனால் அந்த படம் வேண்டாம் என தயாரிப்பாளரிடம் கூறினேன். ஆனால் தயாரிப்பாளர்கள் என்னை விடவில்லை. அந்த படம் வெளியானால் தோல்வி அடையுமென்று தெரிந்தே படத்தை இயக்கினேன். அதுபோல தோல்வி படமாக அமைந்தது. அதற்கான தண்டனையை 5 வருடங்கள் அனுபவித்தேன். 2007 ல் திருத்தம் வெளியானது. அதன் பின்னர் 2012 வரை எனக்கு படம் இயக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. பின்புதான் வருத்தப் படாத வாலிபர் சங்கம் வாய்ப்புக் கிடைத்தது’ எனக் கூறியுள்ளார்.