வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 9 நவம்பர் 2024 (10:50 IST)

தீபாவளுக்குக் கூட லீவ் விடாமல் விஜய் சேதுபதி பட ஷூட்டிங்கை நடத்திய பாண்டிராஜ்!

இயக்குனர் பாண்டிராஜ் தமிழ் சினிமாவின் முக்கியமான கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர். பசங்க படத்தின் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்து இயக்கிய கடைகுட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற திரைப்படங்கள் பெரியளவில் வெற்றியைப் பெற்றன. கடைசியாக அவர் இயக்கிய ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு ரிலீஸாகி தோல்வி படமாக அமைந்தது.

இதனால் பாண்டிராஜ் தன்னுடைய அடுத்த படத்தின் திரைக்கதையை உருவாக்க ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டார். திரைக்கதையை எழுதி முடித்த பாண்டிராஜ் இப்போது விஜய் சேதுபதி நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அந்த படத்தைத் தொடங்கியுள்ளார். விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு தென்கடலோர மாவட்டப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தை விரைவாக முடிப்பதற்காக தீபாவளி அன்று கூட விடுப்பு அளிக்காமல ஷூட்டிங்கை நடத்தியுள்ளாராம் இயக்குனர் பாண்டிராஜ்.