செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: புதன், 6 மே 2015 (09:50 IST)

மணிரத்னத்துக்கு உடல்நலக்குறைவு - டெல்லி மருத்துவமனையில் அனுமதி

இயக்குனர் மணிரத்னம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இயக்குனர் மணிரத்னம் டெல்லி சென்றிருந்தார். நேற்று மதியம் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனையடுத்து அவர் டெல்லியிலுள்ள, இந்திரபிரஸ்தா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
 
மணிரத்னத்துக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு பற்றி மருத்துவர்கள் கூற மறுத்துவிட்டனர். அதேநேரம் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தெரிவித்தனர்.
 
மணிரத்னத்துக்கு ஏற்கனவே நெஞ்சுவலி ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.