ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 24 டிசம்பர் 2021 (10:26 IST)

அமிதாப் பச்சனுக்காக எழுதிய கதையில் ரஜினி! விரைவில் அறிவிப்பு!

இயக்குனர் பால்கி சமீபத்தில் ரஜினிகாந்தை சந்தித்து அவருக்கு ஒரு கதையை சொல்லியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து உடனடியாக ஒரு ஹிட் படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதனால் பல இயக்குனர்களிடம் கதைக் கேட்டு வருகிறாராம். அந்த இயக்குனர்கள் பட்டியலில் இப்போது பாலிவுட் இயக்குனரான பால்கியின் பெயரும் இருக்கிறதாம்.

பால்கி சமீபத்தில் சென்னையில் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து கதையை சொல்லியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த கதைக்கு ரஜினியும் கிட்டத்தட்ட ஓகே சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கதையை இயக்குனர் பால்கி தனது அபிமான நடிகரான அமிதாப் பச்சனுக்காக எழுதியதாகவும், இப்போது அதை ரஜினிக்கு சொல்லியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த கட்டத்துக்கு செல்லும் பட்சத்தில் 28 வருடங்களுக்கு பிறகு ரஜினி இளையராஜா காம்பினேஷன் உருவாக வாய்ப்புள்ளது. ஏனென்றால் பால்கி தன்னுடைய எல்லா படத்துக்கும் இளையராஜாவையே இசையமைப்பாளராக பயன்படுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.